மகளிர் தினமாகிய இன்றைய தினத்தை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பங்கு மாதத்தை இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகின்றோம் என வலியுறுத்தி கிளிநொச்சி பழை மாவட்ட செயலகம் முன்பாக பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதனாலும், இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய இன்றைய தினம் மற்றும் இந்த முழு மாதத்தினையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாகப் பிரகடனப்படுத்துகின்றோம்.
கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆரம்பமாகி ஏ-9 வீதியூடாக மாவட்ட செயலகம் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓய மாட்டோம். போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
0 comments:
Post a Comment