தமிழ்- சிங்கள ஊடகவியலாளர்களின் நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை முன்னிட்டு தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் குழு இன்று மதியம் வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர்.
இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து யாழ். தேவி புகையிரதம் மூலமாக புறப்பட்ட இக்குழு மதியம் 2.00 மணியளவில் வவுனியா வந்தடைந்தனர். வவுனியாவிலிருந்து மதியம் 2.15மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண, மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்தக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கின் தமிழ் ஊடகவிலாளர்கள் தொடர்பில் தென்னிலங்கையின் நேசக்கரத்தை நீட்டுவதாகும்.
0 comments:
Post a Comment