பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பளை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தனது ஒன்றரை வயதுப் பிள்ளை கிணற்றுக்குள் வீழந்து விட்டதைக் கண்ட தாய், தனது பிள்ளையைக் காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்திருக்கின்றார்.
இந்நிலையில் தாயும் பிள்ளையும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
பெரிய பளையைச் சேர்ந்த ரஞ்சன் தபோதினி (வயது 31) என்ற தாயும், அவரது பிள்ளையான சிந்துஜன் என்ற ஆண் குழந்தையுமே இறந்தவர்களாவர்.
இவர்கள் இருவரினது சடலங்கைளையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள பளை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment