தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், இன்றைய தினம் குறித்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு வட மாகாணசபை இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நடவடி;ககை ஒரு சில தினங்களினால் பிற்போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள வட மாகாணசபை அமர்வுகளின் போது இந்த உத்தேச சட்டத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வட மாகாணசபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்காது ஆளுனரிடம் சமர்ப்பித்தமையே இவ்வாறு அனுமதியை பெற்றுக்கொள்ள கால தாமதமாகக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment