இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று அதிகாலை ஏற்படுமென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி காலை 9.08 மணி வரையில் நீடிக்கும். பகுதி நேர கிரகணம் காலை 5.47க்கு தொடங்கி, 9.08க்கு முடிவடையும். இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும். இலங்கை மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும்.
இலங்கையில் இன்று காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகியது. 6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். இன்று காலை தோன்ற உள்ள சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில், இலங்கை நேரப்படி அதிகாலை 4:49 மணிக்கு கிரகணம் துவங்கி 10:05 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் மத்திய இந்தோனேசியாவில் முழுமையாக பார்க்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வடக்கு அவுஸ்திரேலியாவில், பகுதி அளவில் கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment