'எட்கா” என்ற உடன்படிக்கையின் ஊடாக நாட்டில் தொழில் சந்தை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இந்திய நாட்டவரை இலங்கைக்கு வரவழைத்து தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்
.
ஹட்டன் நகரில் இன்று நடைபெற்ற எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து தேவைகளையும் வெளிநாட்டவர் அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு தொழில்நுட்ப பொருட்களை நம் நாட்டவர் பணம் கொடுத்து வாங்கும் பொழுது அப்பணம் வெளிநாட்டுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக டோல் தனியார் நிறுவனம் வாழைப்பழம் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் நம்நாட்டு வளங்களை பாவித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை பெருவாரியாக நிகழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் வாழும் ஒவ்வொரு ஐீவனும் வெளிநாட்டுக்கு 5 இலட்சம் ரூபா கடனாளியாக இருந்து வருவதாகவும் கடந்த 30 வருட காலத்தில் எந்தவொரு உள்நாட்டு தொழில்நுட்பமும் இயங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீபா என்ற உடன்படிக்கையை மஹிந்த அரசாங்கம் கொண்டு வந்ததாகவும் அது மக்களின் போராட்டத்தால் தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் எட்காவை கொண்டு வர முயற்சிப்பதாகவும் இதன் உள்ளக இரகசியங்கள் மக்களுக்கு இன்னும் தெளிவுப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டுக்கு ஏற்ற ஒரு உடன்படிக்கை அல்ல எனவும் இதை முற்றாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வெளிநாட்டவர்க்கு விற்பனை செய்யும் அரசாங்கங்களை மக்கள் தெரிவு செய்கின்றனர்
.
நமது நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் வெளிநாடுகளுடன் செய்யப்படும் உடன்படிக்கைகள் பாதிக்கு பாதி இலாபம் வரக்கூடியதாக அமைய வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு பதவி இல்லாமல் உயிர் வாழ முடியாது. இவரை மீண்டும் பதவிக்கு கொண்டு வந்து ஊழல்களை மறைப்பதற்கு ஆலயங்களில் தேங்காய்கள் உடைக்கப்படுகின்றது.
நாட்டின் மக்களுக்கு நல்லது நடப்பதற்கு தேங்காய் உடைக்கப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment