சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய இணை தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அரச ஊழியர்கள் காணிகளை கோரும் போது செல்லா காசாக்கப்பட்டனர். இந்த நிலைமையை போக்க காணி இல்லாத அரச ஊழியர்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை கட்டிக்கொள்வதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக 4 வீத வட்டியில் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படும்.
இதன் மூலம் அரச ஊழியர்களின் கனவு நனவாகும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் காணிகளை வழங்கும் போது, காணி இருப்பவர்களுக்கு மிகப் பெரிய காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி அடிப்படையின்றி, பல்வேறு தொடர்புகள் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இனிமேல் அப்படியான முறையில் காணிகளை அதிகாரிகள் வழங்கக் கூடாது என அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment