வட்டவளை வெலிஓயா கீழ்பிரிவு தோட்டத்தில் 9 வயது பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஏற்கனவே இரு பெண்களை திருமணம் முடித்த சந்தேகநபர், தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில், தனது பராமரிப்பின் கீழ் இருந்த குறித்த மாணவனை கடந்த வாரம் வல்லுறவுக்கு உட்படுத்தி வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மாணவனை மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த மாணவன் தனது உறவினர் ஒருவரிடத்தில் நேற்று கூறியதையடுத்து தோட்ட தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து இன்று காலை மணியளவில் ஆலய முற்றத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மாணவன் தனக்கு நேர்ந்த அநியாயத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியுள்ளார். பின் சந்தேகநபரை நையப்புடைத்த மக்கள் வட்டவளை பொலிஸாருக்கு கையளித்துள்ளனர்.
பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment