எமது நாட்டின் ஊடக அமைச்சு இணைய ஊடங்களை ஒழுங்கபடுத்தி பதிவுசெய்வதுடன் இணையங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை அங்கிகரிக்கும் நோக்கோடு தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகவியலாளர் அடையாள அட்டையினையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க நடவடிக்கை எடுத்துவருவதை எதிர்த்து புதிய ஊடகவியலாளர்களின் வருகையையும் அவர்களுக்கான அங்கிகாரத்தையும் விரும்பாத ஒருசில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் இணைய ஊடகவியலாளர்களுக்கு தமக்கு நிகரான அடையாள அட்டையினை வழங்க வேண்டாமென கோரும் மகஜர் ஒன்றினை எதிர்வரும் 26-03-2016 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் ஊடக அமைச்சரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
துரித வளர்ச்சி அடைந்துவரும் இணைய ஊடகங்களில் துடிப்புடனும் ,அற்பனிப்புடனும் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வதற்காகவும் சிலரின் புறக்கணிப்புக்களில் இருந்து மீளவும் அனைத்து இணைய ஊடகவியலாளர்களையும் உரிமையாளர்களையும் உள்ளடக்கிய இணைய ஊடகவியலாளர்களுக்கான சங்கமொன்றினை உருவாக்க எண்ணியுள்ளோம் எனவே காலத்தின் தேவை கருதி அணைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டுமென திறந்த வேண்டுகோள் விடுக்கின்றோம் ஒன்றினைந்து செயற்பட விரும்புவோர் உங்களது பெயர் ,ஊடகத்தின் பெயர் ,மாவட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு 0775588141 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS)
அனுப்பி வைக்கவும் .
இணைய ஊடகவியலாளர்களை ஒன்றிணைப்பது மட்டுமே எமது பணி. அமைக்கப்படும் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றினைத்து இடம்பெறும் முதல் ஒன்றுகூடலில் தெரிவு செய்யப்பட்டு அப்புதிய நிர்வாகம் ஆக்கபூர்வமாக செயற்படும்.
தொடர்புகளுக்கு:- 0775588141
0 comments:
Post a Comment