கிளிநொச்சி டிப்போசந்தி ஜீவப்பரியாரியார் வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீயினால் வீடொன்றும் கடையொன்றும் எரிந்து முற்றாக அழிந்துள்ளது
தீபரவிய வேளை வீட்டில் யாரும் இல்லை எனவும் இன்று உயிர்த்த ஞாயிறு வழிபாட்டிற்காக கோவிலுக்கு சென்றிருந்தனர் என தெரிய வருவதோடு வீட்டு மற்றும் கடையில் இருந்த எவ்வித ஆவணங்களையோ , ஆடைகள், எதனையும் மீட்க முடியவில்லை எனவும் தங்களது கடை மற்றும் வீடு என்பன ஒன்றாக இருந்ததனால் இரண்டையும் இழந்துள்ளதாகவும் தமது வீடு மற்றும் கடையில் தீப்பற்று வதற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை எனவும் இது யாரோ திட்டமிட்டே தீ வைத்திருக்கின்றனர் என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment