வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணம் அஹூன்கல்ல கல்வெஹர பௌத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இரசாயன உர பயன்பாட்டினால் வருடாந்தம் ஐயாயிரம் புற்று நோயாளிகள் புதிதாக உருவாகின்றனர் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகர்களினால் இவ்வாறு இரசாயன உர வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டு எடுக்க விஹாரைகள் தலைமை ஏற்க வேண்டும்.
தெற்கில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரில் மூன்றில் இரண்டு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லை.
வடக்கில் ஐந்து தம்பதியினரில் நான்கு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லை.
மாதிரி விவசாய பண்ணைகளை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment