வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் நேற்று 18.03.2016 இரவு திருடர்கள் புகுந்து பெறுமதியான பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நேற்று வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 9மணியின் பின்னர் நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளார் உரிமையாளர் எனினும் அங்கு பணிபுரியும் இருவர் நிறுவனத்தின் பின்புறமாக இருக்கும் அறையில் தங்கியிருப்பது வழமையானது சம்பவ தினம் இருவரும் அங்கு தங்குவதற்கு சென்றுள்ளனர்.
திருடர்கள் ஜஸ்கிறீம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் செயற்படும் பகுதிக்கு போடப்பட்ட சிறியகம்பியிலான கதவினை உடைத்து அதனூடாக உட்புகுந்து அதனுடன் இணைந்திருந்த விற்பனை நிலையத்திற்குள் சென்று காசாளர் மேசையிலிருந்த ரூபா 10.000-ஆயிரம் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றதுடன் நிலையத்திற்குப் பொருத்தப்பட்ட சி.சிரி. கமறாவின் முக்கிய பகுதியினையும் களவாடிச் சென்றுவிட்டதாக அதன் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்குச் சென்ற வவுனியா பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment