விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மருது’. இப்படத்தை ‘கொம்பன்’ முத்தையா இயக்கி இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன், சகலகலாவல்லன் போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு ‘கத்திச்சண்டை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment