மாத்தளை மஹவெல பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆரம்பப் பாடசாலையின் அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அதிபராக சேவையாற்றும் இவர் வேறொரு ஆரம்பப் பிரிவு பாடசாலையொன்றின் அதிபராக இருந்த காலப் பகுதியிலேயே குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அதிபர் இன்று மாத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment