நீண்ட நாட்கள் வாழும் 10 நாய் இனங்கள்!!!

dogஉலகம் முழுவதும் செல்லப்பிராணிகள் என்றால் முதல் இடத்தை  பிடிப்பது நாயாக தான் இருக்கும்.



செல்லப்பிராணிகளை விரும்பும் பலரும் நாயை தங்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதுவார்கள். நாய் வளர்க்கும் பெரும்பாலோனோர் கேட்கும் கேள்வி “என் நாய் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?” என்பதாக தான் இருக்கும். நீண்ட ஆயுளை கொண்ட நாயை வாங்க தான் பலரும் விரும்புவார்கள். இப்படி நீண்ட காலம் வாழக்கூடிய நாய் இனங்கள் குறைந்தது பத்தாவது இருக்கும்.


 

நாயின் வாழ்க்கை காலம் பல காரணிகளை பொறுத்து அமைந்துள்ளது. அதன் சொந்தக்காரர்களிடம் இருந்து கிடைக்கும் அக்கறை மற்றும் அன்பை தவிர, சில நாய்களின் ஆயுட்காலம் அதன் இனத்தை பொறுத்தே அமைகிறது. பொதுவாக நாயின் ஆயுட்காலம் 12 அல்லது 13 வருடங்களாக உள்ளது. ஆனால் சில இன நாய்கள் இதை விட அதிகமாகவும் வாழ்கிறது.



ஒரே இன நாய்களை விட கலப்பின நாய்களின் ஆயுள் அதிகமாக இருக்கும். அதிக ஆயுட்காலத்தை கொண்ட 10 நாய் இனத்தைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். நாயை உங்கள் செல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்கும் போது, நாய் இனத்தின் ஆயுட்காலம் போன்ற அனைத்து காரணிகளையும் கருத வேண்டும். மேலும் அதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பைக் காட்டிலும் அது அதிகமான காலத்திற்கும் உயிர் வாழலாம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.



சிஹுவாஹுவா (Chihuahua)



நீண்ட காலம் வாழும் 10 நாய் இனத்தில் இதுவும் ஒன்றாகும். மேலும் சிஹுவாஹுவா என்பது மிகுந்த சிறிய இனத்தில் ஒன்றாகும். சிஹுவாஹுவா இனத்தின் ஆயுள் எதிர்பார்ப்பு சராசரியாக 15 முதல் 20 வருடங்களாகும். இந்த சிறிய இனம் குழந்தைகளிடம் கணிவாக நடப்பது ஈர்க்கத்தக்க அம்சங்களில் ஒன்றாக உள்ளது.



நியூ கினியா சிங்கிங் நாய் (New Guinea Singing Dog)



நியூ கினியா


சிங்கிங் நாய் ஒரு காட்டு நாயாகும். இதன் அதிகப்படியான ஆயுள் எதிர்ப்பார்ப்பு 18 வருடங்களாகும். இது காட்டு இனமாக இருந்தாலும் கூட மென்மையாகவும் நட்புடனும் பழகும். அதிக ஆயுளை கொண்ட நாய்களில் இதுவும் ஒன்றாகும். -



யார்க்ஷைர் டெர்ரியர் (Yorkshire Terrier)



நீண்ட ஆயுள் காலத்தை கொண்ட மிகச்சிறிய இனங்களில் ஒன்று தான் யார்க்ஷைர் டெர்ரியர். இந்த நாயின் அதிகப்படியான ஆயுள் எதிர்ப்பார்ப்பு 20 வருடங்களாகும். நாய் பிரியர்கள் மத்தியில் யார்க்ஷைர் அதிகமாக விரும்பக்கூடிய வகையாக உள்ளது.



ஜாக் சி (Jack Chi)



நீண்ட ஆயுளை கொண்ட 10 நாய் இனங்களில் ஒன்றாக உள்ளது ஜாக் சி. ஜாக் ரசல் டெர்ரியர் மற்றும் சிஹுவாஹுவாவின் கலவையாக உள்ள இந்த இனம் மிகவும் நட்பாக இருக்கும். இதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பு 18 வருடங்களாகும்.



ஆஸ்திரேலியன் ஷெபர்ட் (Australian Shepherd)



ஆஸ்திரேலியன் ஷெபர்ட் நாய்கள் அறிவுடன் சேர்த்து, நல்ல மேய்க்கும் திறமையையும் கொண்டுள்ளது. அதனால் தான் இது மிகவும் தேவைப்படுகிற இனமாக உள்ளது. இதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பும் 18 வருடங்கள் என்பதால் இதன் ஆயுத காலமும் அதிகமாக உள்ளது.



ஷி சூ (Shih Tzu)



ஷி சூ இனத்தை அரச நாய்கள் என்றும் அழைக்கலாம். அதற்கு காரணம் அவை சீன அரச பரம்பரையால் நேசத்துக்குரிய இனமாக விளங்கியது. மிகவும் நட்புடனும், நம்பிக்கை குணத்துடனும் விளங்கும். இதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பு 20 வருடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 

பொமரேனியன் (Pomeranian)


உலகம் முழுவதும் புகழ் பெற்ற நாய் இனமாக விளங்குகிறது பொமரேனியன். இதன் இனிமையான மற்றும் நட்பு தன்மையுடன், ஆயுட் காலம் 16 வருடங்களாக இருப்பது இதன் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது.



டாஷந்த் (Dachshund)



டாஷந்த் நாய்களின் பெயரும் வடிவமும் ஒரே மாதிரி தான்; அது செங்குத்தாக வளரும். அவற்றை நீங்கள் விரும்பலாம். அதன் அன்பை 15 வருடங்களுக்கு மேலாக நீங்கள் அனுபவிக்கலாம். நீண்ட காலம் வாழும் 10 நாய் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.



ரட் சா (Rat Cha)



18 வருடங்களுக்கும் அதிகமான ஆயுளை கொண்டுள்ள ரட் சா நாய் மிகவும் விசுவாசமாக இருக்கும். ஆனால் பிற நாய்களுடன் அது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும்.



கோக்கபூ (Cockapoo)



தடித்த அலை அலையான தோலை கொண்ட கோக்கபூ காக்கர் ஸ்பானியல் மற்றும் பூடில் இனத்தின் கலவையாகும். இதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பு 16 வருடங்களுக்கு அதிகமாக உள்ளது.


 

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com