எதிர்பார்ப்பு என்பது மனிதர்களின் இயல்பான குணாதிசயங்களுள் ஒன்று. அவரவர் சூழ்நிலை, சந்தர்பத்தை பொருத்து அதன் அளவு ஏறக்குறைவது உண்டு. என்ன பெண்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் என இந்த சமூகம் அடிக்கடி அவர்களை குற்றம் சாட்டும்.
இதில் ஒன்னும் தவறில்லையே, குழந்தைகளிடம் எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். பெண்கள் வளர்ந்தாலும் அவர்களுக்குள் குழந்தைத்தனமான குணாதிசயங்கள் பெரிதாக குறையாது. அதன் ஒரு வெளிபாடு தான் அவர்களது எதிர்பார்ப்பு.
உடை, நகை, போன்றவற்றை காட்டிலும் பெண்களது எதிர்பார்ப்பு தனது எதிர்கால கணவன் மீது தான் அதிகமாக இருக்கிறது….
பொறுமை
நிகழ்வுகளுக்கு செல்லும் போது நேர தாமதம் ஆவது என்பது மட்டுமின்றி, வேலையின் பால் எதிர்நோக்கும் நன்மை, விளைவுகள், இல்வாழ்க்கை தருணங்கள் என எதற்கும் அவசரப்படாமல், பொறுமையாக இருக்க தெரிந்திருக்க வேண்டும்.
நன்றி
கணவன், மனைவி உறவுக்குள் நன்றி இருக்கக் கூடாது என்பார்கள். ஆனால், பாராட்டலாம். சமையலில் அவர்கள் புதியதாக ஏதேனும் செய்தால் என்றில்லை, காலையில் உங்களை எழுப்பி காபி கொடுக்கும் போது கூட நன்றாக இருக்கிறது என ஒரு வார்த்தை கூறி அவர்களை உத்வேகப் படுத்தலாம்.
நகைச்சுவை
சிடுசிடுப்புடன் இல்லாமல், எதையும் அறிவியல் ரீதியாக பார்த்து நொட்டைப் பேச்சு பேசாமல், அவ்வப்போது மொக்கையாகவாவது காமெடி செய்ய வேண்டும்.
ஒத்துப்போவது
வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம், நல்லது கெட்டது என வாழ்க்கையின் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் அதற்கு ஏற்றார் போல ஒத்துப் போக தெரிந்திருக்க வேண்டும்.
மென்மை
ஆண்கள் என்றாலே கம்பீரம், வீரம் என்று இல்லாமல், பெண்களிடம் தன்மையாக, மென்மையாக அந்தந்த தருணம், அவர்களது உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ப சாந்தமாகவும் பேச வேண்டும்.
சகிப்புத்தன்மை
இல்லறத்தில் எல்லா நேரத்திலும், கணவன், மனைவி இருவருக்கும் பிடித்த மாதிரியே நடந்துக் கொள்ள முடியாது. எனவே, தவறுகள் நேரிடும் போது அதை சகித்துக் கொள்ளவும் வேண்டும்.
பெருந்தன்மை
உறவுகளில் எதையும் எதிர்பார்க்க கூடாது, நீங்களாக முன்வந்து கொடுக்க வேண்டும். அன்பு, பரிசு, காதல், முத்தம் என அனைத்தும் தருவதாக இருக்க வேண்டும், பெறுவதாக மட்டும் இருக்க கூடாது. இதை வெளிப்படுத்துவதில் ஆண்கள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
அறிவுக்கூர்மை
பெண்களால் கேள்விக் கேட்காமல் இருக்க முடியாது. எனவே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் அளவிற்கு அறிவுக் கூர்மை இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சமாளிக்கவாவது.
நேர்மை
பேச்சில் மட்டுமின்றி நடத்தையிலும், குணத்திலும் கூட நேர்மையாக இருக்க வேண்டும்.
மனிதநேயம்
கடலளவு இல்லையெனிலும், துளி அளவாவது மனதில் மனித நேயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் வீட்டார் மேலாவது அதை காட்ட வேண்டும்.
கருணை
மற்றவர் வருந்தும் போது பணம் கொடுத்து உதவுவது தான் கருணை என்றில்லை. ஆறுதலாக நான்கு வார்த்தை பேசுவது கூட நல்ல கருணை தான்.
அனுதாபம்
தனக்கு வந்தால் மட்டும் தான் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல இல்லாமல். அனைவரின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், அனுதாபம் காட்ட வேண்டும்.
0 comments:
Post a Comment