ஊர்காவற்துறை அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், (சனிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பினை மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமியை மீட்ட பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர் செய்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment