இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகளிர் பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர்கள் ஆஸி அணியை வீழ்த்தி முதல் முறையாக இப்பட்டத்தை வென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா இதற்கு முன்னர் மூன்று முறை மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் பட்டத்தை வென்றுள்ளது.
மகளிர் இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியினர் தமது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
இதில் விலானி மற்றும் லானிங் இருவரும் தலா 52 ஓட்டங்களை எடுத்தனர்.
எனினும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மகளிர் உறுதி தளராமல் ஆடி வெற்றி பெற்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஹேலி கிறிஸ்டின் மேத்யூஸ் 59 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார். அவரும் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரும் அணியின் தலைவியுமான ஸ்டெஃபனி டெய்லரும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
டெய்லர் 59 ஓட்டங்களை எடுத்தார். இறுதி ஆட்டத்தில் மூன்று பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி தமது வெற்றியை பெற்றனர்.
0 comments:
Post a Comment