ஏ.எச்.எம். பௌசி தலை­மையில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் ஓரணியில்!

ytiftyiiபுதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமு­தா­யத்தின் பரிந்­து­ரை­களை வடி­வ­மைப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கட்சி பேத­மின்றி தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் தலை­மையில் ஒன்­றி­ணைந்­துள்­ளனர்.



பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்கள் அனை­வரும் ஒன்­று­கூடி புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமூ­கத்­துக்­கான பரிந்­து­ரைகள், ஆலோ­ச­னைகள் பற்றி தீர்­மா­னிக்­க­வுள்­ளனர்.

இதற்­கென எதிர்­வரும் 20 ஆம் திகதி புதன்­கி­ழமை மாலை 5 மணிக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் இரா­ஜாங்க அமைச்சர் பௌஸியின் தலை­மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்­று­கூடி முஸ்லிம் சமூகம் தொடர்­பான பரிந்­து­ரை­களை ஆரா­ய­வுள்­ளனர்.

இது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி  கருத்துத் தெரி­விக்­கையில்
‘புதிய அர­சி­ய­ல­மைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்­பாக உள்­வாங்­கப்­பட வேண்­டிய விட­யங்­களை முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் சிவில் சமூக அமைப்­புகள், நலன்­புரி அமைப்­புகள் என பல்­வேறு அமைப்­புகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைத்­துள்­ளன.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்­ அ­னை­வரும் கட்சி மற்றும் கொள்கை வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­றி­ணைந்து சமூகம் சார்­பான பரிந்­து­ரை­களை முன்­வைக்கத் தீர்­மா­னித்­துள்ளோம். புதிய அர­சியல் அமைப்பில் சமூகம் சார்ந்த பல விட­யங்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யுள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக கடந்த காலம் முதல் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தீர்வு காணப்­பட வேண்டும். சமூ­கத்தின் உரி­மைகள் பாது­காப்பு, கல்வி, கலா­சாரம், பொரு­ளா­தாரம் என்­ப­ன­வற்­றுக்கு உத்­த­ர­வாதத்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

எமது முஸ்லிம் தனியாள் சட்­டத்தின் திருத்­தங்­களும் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யுள்­ளன.

இவற்றை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாம் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யாடி தீர்­மா­னங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் இவ்விவகாரத்தில் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது எமது சமுதாயத்தின் விடிவுக்கு சிறந்ததோர் வாய்ப்பாக அமையும் என்றார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com