போலந்து நாட்டில் 2 மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்ட தாய்க்கு. தற்போது பிள்ளை பிறந்துள்ளது. நம்புவதற்கு சற்று கஷ்டம் தான். இறப்பது என்று நாம் கூறுவது , எமது மூளை செயலிழந்து போவது. நினைவுகள் அழிந்து பின்னர் இதயம் நின்றுவிடுகிறது. இதய துடிப்பை கூட கட்டுப்படுத்துவது மூளை தான். போலந்து நாட்டில் 6 மாத கர்பிணியாக இருந்த பெண் ஒருவர் மூளை புற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டார்.
அவரது மூளை முற்றாக இயங்கவில்லை என்று மருத்துவர்கள் கூறி, அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள். ஆனால் அவர் வயிற்றில் உள்ள கருவை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய மருத்துவர்கள் திடீர் முடிவு ஒன்றை எடுத்தார்கள்.
அது என்னவென்றால் , குறித்த கர்பிணிப் பெண்ணின் இதயத்தை செயற்கைகாய துடிக்கவைப்பது என்றும். சிசுவை 2 மாதம் கழித்து வெளியே வெட்டி எடுக்கலாம் என்பது தான் மருத்துவர்களின் முடிவாக இருந்தது. அதுவரை அது உயிரோடு இருக்குமா இல்லையா என்பது கூட மருத்துவர்களுக்கு சரியாகத் தெரியாது.
இன் நிலையில் கர்பிணியின் இதயத்தை செயற்கையாக துடிக்கவைத்து, உணவை திரவ வடிவில் வயிற்றுக்குள் செலுத்தி வந்துள்ளார்கள். வழமையாக தாயின் சூலகத்திற்கு அருகாமையில் பிளஸ்டனர் என்னும் ஒரு, உறுப்பு உருவாகும். அதில் இருந்தே தொப்புள் கொடி உருவாகி. தொப்புள் கொடி ஊடாகவே சுவாச காற்றும் பிள்ளைக்கு தேவையான சத்துள்ள உணவும் செல்லும். இதனை கூட மூளை தான் செய்கிறது என்பார்கள். ஆனால் இங்கே அது பொய்யாகிவிட்டதோ இல்லை , தாய்மை எப்பவுமே உயிருடன் தான் இருக்கும் என்பது உண்மை என்பதனை நிரூபிக்கவோ இச்சம்பவம் இடம்பெற்றது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம் குறித்த கர்பிணியின் மூளை இறந்தாலும் பிளசன்டர்)தொப்புள்கொடி) செய்யவேண்டிய வேலையை அது சரியாகவே செய்துள்ளது.
சரியாக 55 நாட்கள் கழித்து பிள்ளையை வெட்டி வெளியே எடுத்துவிட்டார்கள். 7 மாதத்தில் பிள்ளையை வெட்டி வெளியே எடுத்த போலந்து மருத்துவர்கள். ஒருவாறு பிள்ளையை உயிர்பிழைக்கவும் வைத்துவிட்டார்கள். உலகில் சிலபல அதிசயங்கள் அவ்வப்போது நடக்கிறது. ஏன் நடக்கிறது ? எதற்கு நடக்கிறது என்று எவராலும் எதிர்வு கூறவே முடியாது.
0 comments:
Post a Comment