நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட முக்கிய குழுக்களைச் சேர்ந்த 36 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை,மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்ைகயின் போது இக்குழுக்களால் பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 32 தோட்டாக்களுடன் 2 மெகஸின்கள் ,4 ரி 56 ரக துப்பாக்கிகள், 4 கைத்துப்பாக்கிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் பாதாள குழுக்களின் தலைவர்களிடையே இடம்பெற்ற கொலைகளையடுத்து அது குறித்து விசேட சோதனைகளை நடத்துமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நியமிக்கப்பட்டது முதல் கடந்த ஒரு மாத காலமாக இந்த சோதனை நடவடிக்ைக முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தி வரும் அதேநேரம் ஏனையோர் விளக்கமறியல் அல்லது சிறை வாசம் அனுபவித்து வருவதாகவும் பிரதி பொலிஸ்்்மா அதிபர் ஜயசுந்தர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் எண்மர் களனி பிரதேச பொலிஸ் அமுலாக்கள் பிரிவினாலும் மேலும் எண்மர் பாணந்துறை பிரதேச பொலிஸ் அமுலாக்கல் பிரிவினாலும் நால்வர் நுகேகொடை பிரதேச குற்றவிய்ல் தடுப்பு பிரிவினாலும் ஐந்துக்கு மேற்பட்டோர் நீர்கொழும்பு பிரதேச பொலிஸ் அமுலாக்கல் பிரிவினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட விசேட வீதித் தடைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக்கூறிய ஜயசுந்தர, இந்த வீதித் தடைகள் ஒரு வலையமைப்பாக முன்னெடுக்கப்படுமெனவும் கூறினார். பொலிஸாரின் தகவல்களுக்கமைய தற்போது நாட்டில் 15 பிரதான குழுக்கள் குற்றளவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இவற்றில் அநேகமானவை மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே கூடுதலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.குழுத் தலைவர்களுக்கிடையிலான மோதல்களின் பிரதிபலிப்பாகவே தென் அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவரின் கொலையின் பிரதான சந்தேக நபரான தனுஷ்க ஹர்ஷவின் கொலை மற்றும் பாரத்த லக்ஷ்மனின் பிரதான கொலை சூத்திரதாரியான தெமட்டகொட சமிந்தவை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியமை என்பனவாகும்.
0 comments:
Post a Comment