5 வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்ட சந்தேக நபரை நேற்று பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்பொன்றிற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் ஆபாச காணொளியை சிறுமியிடம் காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற வேளை சிறுமி தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுதொடர்பில் சிறுமி பெற்றோரிடம் கூறியதை முன்னிட்டு சிறுமியின் பெற்றோர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment