உலகத்தில் தினசரி 13 மில்லியன் டொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் மற்றும் அழியாத கழிவுப்பொருள்கள் கடற் பிரதேசங்களில் சேர்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதில் 80 சதவீதமானவை பிளாஸ்டிக் மற்றும் கனமாக கழிவுப்பொருட்கள் கடலில் வெளியேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனி நபர் நாளொன்று 5 கிலோகிராமுக்கும் அதிகமான கழிவு பொருட்களை சுற்றாடலுக்கு வெளியேற்றுவதுடன், அதில் 300 கிராம் பிளாஸ்டிக் போன்ற அழிவடையாத கழிவுப் பொருட்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில், தினமும் இலங்கையில் சுமார் 51 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் சேர்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment