65000 விடுகளை நிர்மானிக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என சிரேஸ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.
இரண்டு மாகாணங்களினதும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக யாருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீட்டு நிர்மானப் பணி;க்கான மீளவும் விலை மனு கோரப்படாது எனவும், மிட்டால் நிறுவனத்திற்கு ஏற்கனவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான நிர்மானப் பணிகளை உள்நாட்டு கட்டிட நிர்மானிப்பாளர்களினால் மேற்கொள்ள முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் 65000 வீடுகள் நிர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment