காதல் அதிகரிக்கும் போது பெண்கள் பல சமயங்களில் குழந்தையாகவும், சில சமயங்களில் சர்வாதிகாரியாகவும் மாறிவிடுவார்கள். பெரும்பாலும், ஆண்கள் மத்தியில் காதல் அதிகரிக்கும் போது கெஞ்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் மத்தியில் காதல் அதிகரிக்கும் போது கொஞ்சல் அதிகரிக்கும்.
பெண்களுக்கு கட்டுமஸ்தான ஆண்களை தான் பிடிக்கும் என தவறாக எண்ணுகிறார்கள். எந்த பெண்ணும் சிக்ஸ் பேக் வைத்த ஆண் தான் வேண்டும் என அடம்பிடிப்பது இல்லை. அவர்கள் விரும்புவது எல்லாம் தன் சோகத்தை தாங்கிக் கொள்ளவும், சந்தோசத்தை தூக்கிக் கொள்ளவும் தோள்கொடுக்கும் ஆணை தான்.
தோள்பட்டை
பறந்து, விரிந்த தோள்பட்டை உள்ள ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கிறது. காரணம், சந்தோசமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் பெண்களுக்கு ஆண்களின் தோள்களில் சாய்ந்து படுத்துக் கொள்ள அதிகமாக பிடிக்குமாம்.
மார்பு
துணை உள்ள ஆண்களுக்கு மட்டுமே இது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பெண்கள் காதல் பெருக்கெடுத்து ஆணை நெருங்கும் போது ஆசையாக மார்பை வருடிவிடுவார்கள். இது பெண்கள் மிகவும் பிடித்து செய்யும் செயலாகும்.
அணைப்பு
மார்பில் சாய்வாக முகம் புதைத்து இடையோடு கட்டியணைத்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்காகவே சில பெண்கள் தங்களை விட சற்று உயரமான ஆண்களை விரும்புவதும் உண்டு.
கூந்தல்
இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடிக்கும். காதல் பொங்கிவழியும் தருணத்தில் காதலி / துணையின் மடியில் படுத்துக் கொண்டிருக்கையில் கூந்தலை விரல்களால் வருடிவிடுவது.
தாடி
அது என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை, இயல்பாகவே முழுதாக ஷேவ் செய்த ஆண்களை விட, அந்த மூன்று நாள் தாடி வைத்திருக்கும் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது.
கண்கள்
ஓர் ஆண் மீது பெண்ணுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுத்துவது எது என்றால் கண்டிப்பாக அது ஆண்களின் கண்கள் தான். அடர்த்தியான புருவம் மற்றும் கூர்மையான பார்வை இருக்கும் ஆண்கள் மீது பெண்கள் எளிதாக ஈர்ப்பு கொள்கின்றனர்.
கைகள்
எத்தனை தூரமாக இருந்தாலும், இலகுவாக கைக்கோர்த்து ஆணுடன் நடப்பது பெண்களுக்கு பிடிக்கும். இதில் சற்று குழந்தைத்தனமும் கலந்திருக்கும் என்பது தான் அழகானது.
0 comments:
Post a Comment