காதல் என்ற ஒன்று ஒருவர் மீது மனதில் எழும் போது, காதலிக்கும் நபர் வெள்ளையா கருப்பா, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், நெட்டையா குட்டையா என்பதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. ஜாதி மாறி திருமணம் செய்தாலே ஒப்புக் கொள்ளாத பெற்றோர்கள் உள்ள நம் நாட்டில், மதம் மாறி திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளும் பெற்றோர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இம்மாதிரியான பெற்றோர்கள் மிகவும் குறைவு மற்றும் இவர்கள் மற்றவர்களுக்காக வாழாமல் தங்களது மகன்/மகளின் சந்தோஷத்தை மட்டும் தான் பார்ப்பவர்களாக இருப்பார்கள். இங்கு அப்படி இந்தியாவில் மதம் மாறி பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழும் இந்திய தம்பதிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அஜித் – ஷாலினி
பல ரசிகர்களின் மனதில் வாழும் நடிகர் அஜித் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது இந்த தம்பதி 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளனர்.
சூர்யா – ஜோதிகா
காதல் ஜோடி என்றாலே அஜித்-ஷாலினிக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வரும் தம்பதி சூர்யா-ஜோதிகா தான். இதில் சூர்யா இந்து மற்றும் ஜோதிகா முஸ்லீம் ஆவார்கள். இருப்பினும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஜெனிலியா – ரித்தேஷ்
நடிகை ஜெனிலியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். இவர் இந்து மதத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமலாபால் – விஜய்
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகை அமலா பால், தமிழ் இயக்குனரான விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஷாருக்கான் – கவுரி கான்
உலகம் முழுவதும் பிரபலமான நடிகரான ஷாருக்கான், பிராமணரான கவுரியை காதலித்து திருமணம் செய்து, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அமீர் கான் – கிரண் ராவ்
முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அமீர் கான், பிராமணரான கிரண் ராவ் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார்.
சோஹைல் கான் – சீமா சச்தேவ்
நடிகர் சோஹைல் கானும், சீமா சச்தேவ்வும் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டனர். சீமா பஞ்சாபி என்பதால், அவர்கள் காலையில் ஆர்ய சமாஜ் முறைப்படியும், மாலையில் முஸ்லீம் முறைப்படி நிக்காஹ் செய்து கொண்டனர். பின் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது 2 மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஷிரிஷ் குந்தர் – ஃபாரா கான்
இந்த தம்பதியர் வெவ்வேறு மதத்தினர் மட்டுமின்றி, அதிக வயது இடைவெளியும் கொண்டவர்கள். அதிலும் ஃபாரா கான் ஷிரிஷை விட 8 வயது மூத்தவர். இருப்பினும் இவர்கள் பல பிரச்சனைகளைக் கடந்து, 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஃபர்ஹான் அக்தர் – அதுனா பபானி
இந்த தம்பதியர்கள் மூன்று வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்ததோடு, அதுனா ஃபர்ஹானை விட 6 வயது மூத்தவர்.
அர்பாஸ் கான் – மலாய்கா அரோரா கான்
முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், முஸ்லீம் அல்லாத மலாய்கா அரோராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் இவர்களது திருமணம் சற்று வித்தியாசமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் விவாகரத்துப் பெறப் போவதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment