இலங்கை கிரிக்கெட் நிருவாக சபையை நீக்கிவிட்டு, இடைக்கால நிருவாக சபை ஒன்றை அமைத்து நாட்டின் கிரிக்கெட்டை இன்னும் சரிய விடாமல் பாதுகாக்குமாறு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இடைக்கால நிருவாக சபையொன்று நியமிக்கப்படுமாயின் அதன் பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராகவுள்ளதாகவும், கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இந்நாட்டுக்குக் கிடைத்த புகழை மீண்டும் கொண்டுவர தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment