வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரின் வழக்கு விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேக நபரை எதிர் வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, மாணவி கொலை தொடர்பான பகுப்பாய்வு டிஎன்ஏ அறிக்கைகள் இன்றும் பொலிசாரால் மற்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment