சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த உக்ரைன் நாட்டு பெண் பயணி ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கினிகத்தேனை பொலிஸாரால் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பகல் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த கினிகத்தேனை பொலிஸாரால் கினிகத்தேனை பகுதியில் சுற்றிதிரிந்த குறித்த வெளிநாட்டு பிரஜையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட கினிகத்தேனை பொலிஸார் குறித்த வெளிநாட்டு பெண்ணை பரிசோதித்துள்ளனர்.
இதன்போது, அவரின் பயண பையில் இருந்த கடவுச்சீட்டை பரிசோதனை செய்த போது அவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த தட்டியான என்ற பெண்மணி என அடையாளம் காணப்பட்ட போது இவர் இலங்கையில் இருந்து தனது நாட்டுக்கு செல்வதற்கான வீசா காலம் இருப்பதாக அறிந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று பகல் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட போது, மேலதிக சிகிச்சையை மேற்கொள்ளவென குறித்த வெளிநாட்டு பிரஜை அவசரமாக கண்டி போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment