மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவு பிரதேசத்தில் மகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தந்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
15 வயதையுடைய சிறுமியே தந்தையினால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி மட்டக்களப்பில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதாகவும் நேற்று முன்தினமே வீடுதிரும்பிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாயார் வேறு திருமணம் செய்து சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி மட்டக்களப்பில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்துவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த சிறுமியின் 45வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment