பஹத் பாசில் மலையாள சினிமா உலகில் மிகவும் பிசியான நடிகர். இவர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த பல படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இதுவரை அவர் நேரடியாக நடித்ததில்லை.
இந்நிலையில், தற்போது முதன்முறையாக நேரடி தமிழ் படம் ஒன்றில் பஹத் பாசில் நடிக்கவுள்ளார். அதுவும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு மோகன்ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில்தான் பஹத் பாசில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதில் அவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது வேறு வேடத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment