வவுனியா மாவட்டத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் இணைந்த மாபெரும் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
மே தின ஊர்வலம் காலை 9.00 மணிக்கு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்னால் ஆரம்பித்து கடை வீதி வழியாக நகரசபையை சென்றடைந்து நகரசபை மண்டபத்தில் (பழைய மண்டபம்) பொதுக் கூட்டமும் நடைபெற உள்ளது.
மே நாள் ஊர்வலத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறும் மக்கள் உரிமையை வென்றெடுக்க மே நாளில் குரல் கொடுக்க அணிதிரளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
0 comments:
Post a Comment