சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீனக் கடலில் ஜப்பானின் போர்க்கப்பல் நங்கூர மிட்டுள்ளது.
தென்சீனக் கடல் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தால் சீனாவுக்கும் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தென்சீனக் கடலில் சீன அரசு பல்வேறு செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு விமானப் படைத் தளங்களை நிறுவியுள்ளது. அந்த தீவுகளுக்கு மின் விநியோகம் வழங்க கடலில் மிதக்கும் அணு மின்சக்தி நிலையங்களையும் அமைத்து வருகிறது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்தப் பகுதி யில் தொடர்ந்து ரோந்து சுற்றி வரு கின்றன. அமெரிக்க கடற்படையின் ரோந்து பணியில் பிலிப்பைன்ஸ் கடற்படையும் அண்மையில் இணைந்தது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த அதிநவீன போர்க்கப்பல் பிலிப்பைன்ஸின் சுபிக் பே பிரீ போர்ட்டுக்கு நேற்று சென்றடைந் தது. இதில் 360 வீரர்கள் பணி யாற்றுகின்றனர். 4 ஹெலிகாப்டர் கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜப்பான் போர்க்கப்பலின் கேப்டன் மசாகி தகாடா நிருபர் களிடம் கூறியபோது, பிலிப் பைன்ஸ்-ஜப்பான் இடையிலான ராணுவ உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது, இப்போது பிலிப் பைன்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நல்லெண்ண பயணமாக இங்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜப்பான் போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ள துறைமுகத்தில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் சீன போர்க்கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால் தென்சீனக் கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment