ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் வவுனியா விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் அபிவிருத்தி நடவடிக்கை துரிதப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று கையளிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு வவுனியா நகரின் அபிவிருத்தி ஆரம்பமாகியுள்ளது
குறிப்பாக பஜார் வீதி புகையிரத நிலைய வீதி என்பன செப்பனிடப்படுவருகின்றது. இவ் அபிவிருத்தி தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில்
யுத்த காலம் நிறைவடைந்து இது வரை செப்பனிடாத இவ் வீதிகள் தற்போது ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு செப்பனிடப்படுவது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் இவ் அபிவிருத்தியினை ஜனாதிபதியின் வருகைக்கு முன் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்
0 comments:
Post a Comment