வவுனியா நகரசபையில் இன்று காலை நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை நகரசபையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையில் எற்கனவே ஏழு பேரின் ஆவணங்கள் ஊழியர்களின் கோவைகள் காணமற்போயுள்ளதாக அண்மையில் நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையிலே இன்று காலை வேலைக்குச் சென்ற ஊழியர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை அங்கிருக்கும் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணை நடைபெறவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் தினம் நெருங்கும் வேளையில் இவ்வாறு ஊழியர்களின் ஆவணங்கள் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது ஊழியர்களின் தினத்தினையே அவமதிக்கச் செய்துள்ளதாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகர சபை செயலாளர் திரு. த. தர்மேந்திரா அவர்களுடன் தொடர்பு கொள்ள மேற்கொண்டபோதும் அவரின்; பதிலினை பெற முடியவில்லை.
0 comments:
Post a Comment