விவாகரத்தான ஒரு ஆணுடன் டேட்டிங் வைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இன்னும் சொல்லப்போனால், இவர்களுக்குத் தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும்.
விவாகரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், விவரங்கள், அவர்களுடைய புத்திசாலித்தனம், வலிமை என்று எல்லாமே உங்கள் டேட்டிங்கிற்கு நன்றாகக் கை கொடுக்கும். மேலும், நீங்கள் சொல்லும் எதையும் அக்கறையுடன் காது கொடுத்து அவர்கள் கேட்பார்கள்.
உங்கள் டேட்டிங்கிற்கு, குறிப்பாக சமீபத்தில் விவாகரத்தான ஆண்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. உங்கள் டீன்-ஏஜ் பருவத்தில் உங்களைச் சுற்றிக் கொண்டிருந்த பசங்களை விட விவாகரத்தான ஆண்கள் எவ்வளவு பெட்டர் என்பதை அனுபவித்துப் பாருங்கள், உண்மை புரியும்!
விவாரத்தான ஆண்களுடன் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.
அனுபவம் வாய்ந்தவர்
விவாகரத்தான ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களைச் சந்தித்திருப்பார். அவை பெரும்பாலும் கசப்பான அனுபவங்களாகத் தான் இருக்கும். எனவே அவற்றுக்கு எதிர்மாறாகத் தான் நடந்து கொள்ள அவர் விரும்புவார். இதனால், டேட்டிங்கின் போது அவர் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்துவார்.
நன்றாக ஒத்துழைப்பவர்
ஒரு விவாகரத்தான ஆணால் மட்டுமே ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாசூக்கு தெரியும். எனவே, நீங்கள் செய்யும் செயல்களில் அவர் உங்களுக்கு நன்றாக ஒத்துழைப்பார்.
உடலையும் தாண்டி புனிதமானவர்
விவாகரத்தான ஒரு ஆண், சாதாரண உடல் கவர்ச்சிக்காக மட்டும் உங்களிடம் பழக மாட்டார். அதற்கும் மேலான ஒரு ஆழமான அன்பை உங்களிடம் காட்டுவதற்குத் துடிப்பார். அப்படியே உங்களிடமிருந்தும் எதிர்பார்ப்பார்.
எச்சரிக்கை மிகுந்தவர்
விவாகரத்தான ஆண் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டவர். எனவே, ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார். மீண்டும் ஒரு தோல்வியைத் தாங்கிக் கொள்ள அவர் விரும்பமாட்டார்.
தீவிரமாக நேசிப்பவர்
தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் விளையாட அவர் நினைக்க மாட்டார். உங்கள் உறவை மதிப்பார்; விட்டுக் கொடுக்க மாட்டார்; உங்களுடனான உறவில் வெகு சீரியஸாகவே இருப்பார்.
ஓரளவு வசதியானவர்
விவாகரத்தான உங்கள் ஆண் நண்பர் ஓரளவு வசதியாகவே இருப்பார். உங்கள் டேட்டிங்கிற்குத் தேவையான செலவுகளைக் கண்டிப்பாக அவரே ஏற்றுக் கொள்வார்.
0 comments:
Post a Comment