மாற்றம் என்பது சொல் அல்லசெயல். தமிழர்கள் எந்தக்கட்சிகளை நம்ப மறுத்தாலும். அரசியல் வாதிகளை நம்பித்தான் ஏமாறுகிறார்கள். நாம்தமிழர் கட்சியின் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு. எடுத்த எடுப்பிலேயே நம்பிவிடும்படியாக செயல் திட்டங்களை வரைந்துள்ளது.
“தொடக்கத்தில் எதையும் வீண் முயற்சி என்பார்கள். வென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள்”
எல்லாவிதமான வளர்ச்சியையும் தமிழ் நாட்டு மக்களுக்குச் செய்துவிடும் துணிவில் உண்மையான போக்கில் எல்லாப் பற்றாக்குறைகளையும் தீர்க்கும் நல்நோக்கத்தை கண்டு பிடிக்கும் ஆழமான 49 பொருளடக்கம் கொண்டதாக நாம் தமிழர் கட்சி செயல் திட்டவரைவு வெளிவந்துள்ளது:
மாறிடும் போக்காக வேண்டும்.இல்லை மாற்றிடும் போர்க்குணமாக வெளிப்பட வேண்டும். “நான்”என்ற ஒன்று இல்லை.
என்பதையும் உணர்ந்து இந்த வரைவு வரையப்பட்டுள்ளது. செயல்பாடுதான் இந்த அறிக்கைகாட்டும் மற்றம். மாற்றத்தைக் காணும் தமிழக அரசியல்.
“தமிழனைத் தமிழன் ஆள வேண்டும். என்ற முழக்கம் போர் முழக்கமாக நாம் தமிழர் கட்சியின் இலட்சியக் கொள்கையாகும்.
எக்கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் நாம் தமிழர் நிலையை எட்டவும் இல்லை அடையவும் இல்லை. அடைவதற்கான வரைவுகளை எக்கட்சிகளும் இதுவரை காட்டவும் இல்லை, முன் வைக்கவும் இல்லை.”
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் பேச்சுக்களும் செயல்களும் வாக்குறுதிகளும் 2009க்குப் பின்னர் முன்னெடுப்புக்குரிய நம்பிக்கையைத் தரவல்லதாக இருந்ததா? உதவியதா? இதுவரை எந்தளவான விளைவை ஏற்படுத்தியது? வியப்புத்தான் தொங்கிநிற்கிறது.
இந்த நிலைப்பாட்டில் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2016 மக்களுக்கு நம்பிக்கை தருகிறது.
நாம் தமிழர் கட்சியின் போக்கையும் வழிமுறைகளையும் நெறியையும் நேற்று-இன்று-நாளையும் பின்பற்றலாம்…தமிழ்மறையோன் திருவுருவம் முதல்கொண்டுவரைவுவரையப்படுகிறது.
“உன்னை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது உன் நம்பிக்கையில் நீதோற்கிறவரை.”மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் புத்தகம் திறந்தவுடன் நிழற்படம் மூலமாகப் பேசுகிறார்..
பெருந்தலைவர் காமராசர்-பாவேந்தர் பாரதிதாசன்- படங்கள் உணர்வு ஊட்டம் பெற தமிழீழத் தேசியத் தலைவர் பேசுகிறார் “அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல.
அரசியல் என்பது மக்களுக்குச் சேவைபுரியும் பணி மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. மேதகுபிரபாகரன் விருதுவாக்கு
நாம் தமிழர் கட்சியின் ஸ்தாபகர் செந்தமிழன் சீமான் கருத்து “இரட்டை மெழுகுவர்த்தி” இது சின்னம் அல்ல மாற்றத்திற்கான எண்ணம் ஏற்றமுறத் தொடங்கும் வரைவுமிகச் சிறப்பான நேர்த்தியுடன் பொலிவும் பக்கத்திற்குப் பக்கம் அழகு மிக்க வண்ணமாய் வரவேற்கவும் வாழ்வளிக்கவும் வந்துள்ளது.
“தலை நகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றுவோம் தொடங்கி புதியவானூர்திகள்-துறைமுகங்கள் அமைத்தல்”வரை என்றுவரைவுக் கொள்கை விளக்கம் சிறப்புறு விளங்குகிறது.
மனித வாழ்வியியல் நோக்கத்தையும் தாக்கத்தையும் பூரணமாகத் தெரிந்துகொண்டதால் வெளிப்பட்ட நிகழ்காலக் கோலங்களாகப் பிரதிபலிப்பனவான அடக்கங்கள் செயல்பாட்டு வரைவு வழங்கும் கொடைத்தன்மையைக் காட்டுகிறது 2016 நாம் தமிழர் வெளியீடு
ஈழம் எங்கள் இனத்தின் தேசம் ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்டபூமி, தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமான வரலாறு சிங்களவருக்கும் முன்னதானது.
அப்படிவாழ்ந்த இனம் இன்று இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதிகேட்டுநிற்கிறது. என்றும் உயிர் மூச்சாகப் பதியப்பட்டு உயர்வாக உள்ளது…
தமிழகம் மாற்ற நிலை ஒன்றினைக் காணவேண்டிய நிலைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைநிலை அரசியல் மாற்றம்.
சத்தியம் நிலை நாட்டப்படல், வாக்குறுதிகாப்பாற்றப்படல், செயல்பாடு புதிய தோற்றப்பாடு மாற்றத்திற்கான பேருண்மைவிளங்க “செயற்பாட்டுவரைவு” விபரமாகவிரைகிறது:
இப்புத்தகம் கூறும் பேருண்மையைக் கண்டறிந்து ஒத்துழைப்பதும் வாக்களிப்பதும் மக்களின் சுதந்திரம். பேருணர்வு கலந்த அறிவுநிலைப்பாடுதமிழர்கள் கண்டறிந்து.
தமிழன் கண்டஅவலம் துன்பம் துயரங்கள் நீங்கும் வல்லமையை யார் தாங்குவார் என்ற நல்லெண்ணம் வெளிப்படச் செயல்படவேண்டும்.
இரு கோணங்களையும் தமிழகம்-தமிழீழம் அறிவுரீதியாக உணர்ந்து தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழினம் பட்டபாடுகள் ஆழமாகத் தெரிந்தும் பள்ளத்தில் விழுந்துவிடுகிறான் தமிழன்! இதை விலக்கி நடக்க சீமான் நாம் தமிழர் கொள்கை இலட்சியம் செயற்பாட்டு நெறி அறியப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரை எழுதும் கவிஞன் வேண்டுகோள்.
தமிழகமக்களின் வாக்குகளும் ஒத்துழைப்பும் பிரயோசனப் படவேண்டும்.
தமிழ் இனத்தின் மொழியையும் விடுதலையையும் பிரதிபலிப்பதாக தமிழகத்தில் எந்தக் கட்சியின் அரசியல் போக்கும் கூட்டாணிக் கட்சிகளும் இல்லை.
தங்களை வளர்க்கும் சுயநலம் சார்ந்தபோக்கும் ஊழல்களும் பொய்களும் கூறிக்கொண்டு நீச்சல் அடிக்கிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு எழிச்சியும் மலர்ச்சியும் காணும் வரைவுதான்.
சூழலின் அரசியல் விழிப்புடன் வந்திருக்கும் இந்த செயற்பாட்டு வரைவுப் புத்தகம்.
காலகாலம் செய்து வந்ததவறை மாற்றி மாற்றத்திற்கான வழிக்கு உதவக்கூடிய விதமாய் 2016 மே 16 வாக்குகளைப் பயன்படுத்துங்கள்.
நாம்தமிழர் கட்சி வரைவு நூலிருந்து பெருதும் மாறுபட்ட மாற்றத்திற்கான ஏற்றமிகு செயல்பாட்டுத் திறமைமிக்கவை.
வியப்பாகவும் வீரமும் நேர்மையும் நல்லெண்ணம் கொண்டுமாற்றமும் மாற்றத்திற்கான அம்சங்களை உள்ளடக்கிய ஆவணம்
நாம் தமிழர் கட்சி ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்து வந்து அரமாக்கியுள்ளது போல் 314 பக்கங்களில் ஒளிசிந்தும் சிறப்புடன் அமைந்துள்ளமை மிகப்பெரும் பாராட்டுக்குரியது.
இந்த நூலினை நினைத்தாலும். பார்த்தாலும். கேட்டாலும், படித்தாலும். தமிழ் நாட்டுமக்களும் ஈழத்தமிழனும் பெருமையடைவார்கள்.
தமிழ் நாட்டு கட்சிகள் கூட்டணிகள் தேர்தல் அறிக்கைகளிலிருந்து நாம் தமிழர் செயற்பாட்டுவரைவு இனிக்கும் மேன்மயும் திறமையும் அறிதலும் அளவிடற்கரியது.
புரிதலும் தெரிதலும் பிறக்கும் என்பது ஈழக்கவிஞன் வாழ்த்து. மிகையாகபெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவரவேற்கப்படும் என்பதும் விமசகர்கள் கருத்து.
சீமான் மனத்தில் மிகவேகத்துடன் அரசியல் களத்தில் தமிழீழத் தலைவரை அளவுக்கு அதிகமான நெருக்கத்துடன் நேசித்தபடி தமிழ்நாட்டு அரசியலில் ஆட்சியில் ஒருமாற்றத்தைக் காணும் வேகத்துடன் முன்னேறிச் செல்கின்றார்.
மேதகுவே.பிரபாகரன் விருதுவாக்குகள் பக்கத்திற்குப் பக்கம் மேலேவிழிப்பையும் வீரயுணர்வையும் விதைக்கின்றது.
231ஆம் பக்கத்திலிருந்து 314ஆம் பக்கம் வரை ஈழத்தமிழன் நேசிப்பின் படலம் சட்டமேதை அம்பேத்கார் ஆட்சிமாற்றம் குறிபிடும் வரைபாய்கிறது.”
அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே. ”வென்றாகவேண்டும் தமிழ்! ஓன்றாகவேண்டும் தமிழர்!
கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்
0 comments:
Post a Comment