அனைத்துலக மட்டத்தில் நிதி மோசடி குறித்து கசிந்துள்ள பனாமா ஆவணத்திலுள்ள ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களின் பெயர் விவரம் இன்று அம்பலப்படுத்தப்படும் என்று ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இத்தகவல்களை அம்பலப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஊழல் எதிர்ப்புக் குழுவினால் நிதி சோசடி விசாரணைப் பிரிவு, ஜனாதிபதி ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தாக்கல் செய்துள்ள முறைப்பாடுகளின் தற்போதைய நிலவரம் பற்றியும் இதன்போது தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கசியவிடப்பட்ட பனாமா ஆணவத்தில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரின் விபரங்கள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment