முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு, அவருக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்புக்கு சமமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் தென் பகுதியான களுத்துரையிலுள்ள விகாரைக்கு இன்று காலை சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த தனக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு சாதாரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் அங்கு கூறினார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது, அவரை ஆபத்துக்குள் தள்ளியுள்ளதாக அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட ஒரு தலைவரின் பாதுகாப்பே தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவிருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு பிரிவினரே மஹிந்த ராஜபக்ஷவுக்காக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அணியும் குற்றஞ்சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment