மற்ற ஆண்களைக் காட்டிலும் இராணுவ வீரர்களை பெண்கள் அதிகம் விரும்பக் காரணம் என்ன
இத்துடன் வீரம் மிக்க பெண்களை ஆண்கள் வெறுப்பதற்குக் காரணம் என்ன.
அண்மையில் இராணுவத்தில் பணி புரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் மீதான ஈர்ப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப் பட்டது (இங்கிலாந்தில்). இதில் போர் நடைபெற்ற நாட்களில் ஏதாவது ஒரு வீரதீர செயல் புரிந்து, அதற்காகப் பதக்கம் பெற்ற ஆண்களின் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. ஆனால் சாதாரணமாக ராணுவத்தில் பணி புரிந்து வீடு திரும்பிய ஆண்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்க வில்லை என்கின்றது இந்த ஆய்வு. இது பெரிய அதிர்ச்சியாக் இருக்கும் போது, மேலும், போர் இல்லாத கால கட்டத்தில், நன்னடத்தை சமூகப் பணி என்று விருதுகள் பெற்ற சமூக ஆய்வாளர்கள் மீதும் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை என்று அதிர்ச்சி அளிக்கின்றது இந்த ஆய்வு.
ஆனால் ஏதாவது ஒரு வீர தீர செயல் புரிந்த பெண்களின் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு குறைகின்றது என்றும் கூறுகின்றது ஆய்வு. இது ஆய்வாளர்கலையே குழப்பம் அடையச் செய்துள்ளது.
மூன்று கட்டமாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடத்தப் பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் கண்டறியப் பட்டுள்ளன. இந்த ஆய்வு இரண்டாம் உலகப் போரின் போது போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களிடம் நடத்தப் பட்டது. முதலில் ஏற்கனவே இருந்த புள்ளி விவரங்களில் இருந்து, இரண்டாம் உலகப் போரில் வீர தீர விருது பெற்ற இராணுவ வீர்களுக்கு மற்ற இராணுவ வீரர்களைக் காட்டிலும் சராசரியாக ஒரு குழந்தை அதிகம் இருப்பது நிரூபிக்கப் பட்டது. (3.18-2.72)
ஆனால் ஒரு தம்பதிக்கு இருக்கும் குழந்தைகளை வைத்து அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பையோ, அன்பையோ கணிக்க முடியாது. அதனால் ஆய்வாளர்கள் சுமார் 92 இங்கிலாந்து மாணவிகளை அழைத்து, பல்வேறு இராணுவ வீரர்களின் பதிவுகளையும் அளித்து, அவர்களில் யாருடன் காதல் செய்வதில் விருப்பம் என்று வரிசைப் படுத்தும் படி கேட்கப் பட்டது. இதில், ஒருவர் இராணுவ வீரராக இருந்தாலும், அவர் வீர தீரச் செயல் எதுவும் புரியாமல் இருக்கும் பட்சத்தில் அவர் வெளி நாடுகளுக்குச் சென்று வந்திருந்தாலும், எங்கு பணி புரிந்திருந்தாலும் அது அவர்கள் மீதான் ஈர்ப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், போருக்கு பொய் இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் போரில் ஈடு பட்டிருக்க வேண்டும்.
இதற்குப் பின் மூன்றாவது கட்டமாக ஹாலந்து நாட்டில் படிக்கும் 159 மாணவிகள் மற்றும் 181 மாணவர்களிடம் இராணுவ வீர்கள் மற்றும் வீராங்கனைகளின் விவரங்கள் அளிக்கப் பட்டன. அவர்களிடம் ஈர்ப்பு குறித்த அதே கேள்வி கேட்கப் பட்டது. அதில் முந்தைய ஆய்வுகளுக்கு நேர் மாறாக வீர தீரச் செயல் புரிந்த பெண்களின் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை என்று கருத்துத் தெரிவித்து இருந்தனர். இது தவிர போர் அல்லாத கால கட்டங்களில் பதக்கம் பெற்ற வீர்களின் மீதும் ஈர்ப்பு அதிகமாகவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்த ஆய்வுகளின் மூலம், பதக்கங்கள் மற்றும் வீர்களின் மீதான காதல் ஈர்ப்பைக் கணிக்க ஆய்வாளர்கள் முயல வில்லை. பொதுவாக வரும் தலைமுறையினருக்கு வீரம் ஊட்டப் படுகின்றதா என்பதை அறியவே இந்த ஆய்வு (அதிகம் ஈர்ப்பு கொண்ட வீரர்களுக்கு குழந்தைகள் அதிகம் இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை)
சரி இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம். உயிரை பணயம் வைத்து, வீர தீரச் செயலில் ஈடுபடும் வீரர்களின் மீது ஈர்ப்பு அதிகம் வரக் காரணம் என்ன? நம் மரபணுக்களே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
“பழங்காலத்தில் இருந்தே போர், யுத்தம் மற்றும் படை எடுப்புகளில் பங்கு பெறுவது ஒரு ஆணின் வீரம் மற்றும் மன தைரியத்தை வெளிப் படுத்தும் அளவு கோல்களாக கருதப் பட்டது. இப்போது இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆண்களின் மதிப்பைக் கூட்டுவதாக அமைகின்றது.” என்கின்றார் சௌதாம்ப்டன் பல்கலைக் கழகப் பேராசிரியரும், இந்த ஆய்வின் சக ஆய்வாளருமான ஜூஸ்ட் லீயூனிசன். அதாவது, இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் ஆண்கள் பெண்களை அதிகமாக ஈர்க்கின்றார்கள்.
ஆனால் இது போன்ற வீரம் மிக்க பெண்கள் ஏன் விரும்பப் படுவதில்லை என்று கேட்கப் பட்டபோது மழுப்பலான பதிலே வருகின்றது. இன்னும் ஆணாதிக்கம் நம்மை ஆணிவேறாகப் பிடித்து இருக்கின்றது என்பதாகக் கூட இருக்கலாம்.
0 comments:
Post a Comment