யாழ்.பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி சுகுனரதி தெய்வேந்திரம் நேற்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டு வேலணை பிரதேச செயலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வேலணை பிரதேச செயலராக கடமையாற்றிய மஞ்சுளாதேவி வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படவிருக்கும் நிலையில், தமது பிரதேச செயலர் மஞ்சுளா தேவியை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலணை பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட பொது அமைப்புகள், மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள்.
இதன்போது தமது பிரதேச செயலர் தமது பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு அளப்பரிய பணிகளை ஆற்றியதாக கூறும் மக்கள் தமக்கு புதிய பிரதேச செயலர் வேண்டாம் எனவும் கூறியுள்ளதுடன், யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகனுக்கு மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment