ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ள போதிலும் நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளை வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் முன்வைத்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment