மக்களின் நிலைப்பாடுகளுக்கு அச்சம் கொள்ளவில்லை என்றால், தொடர்ந்தும் பொய் காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒத்திவைக்காது உடனடியாக நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
எகலியகொட நகரில் அண்மையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிசேன - விக்ரமசிங்க அரசாங்கம் ஏப்ரல் முதலாம் திகதிதான் புதிய வரிகளை மக்கள் மீது சுமத்தவிருந்தது.
ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்களின் தினம் என்பதால், தமக்கு வாக்களித்த முட்டாள்களை கவனிக்க வேண்டும் என அரசாங்கம் எண்ணியது.
வரி விதிப்புகளை அதிகரிக்கும் போது, பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்கு உயரும். ரூபாயின் மதிப்பு குறையும் போதும் இது நடக்கும்.
ராஜபக்ச குடும்பம் திருடியதன் காரணமாகவே பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதிருப்பதாக பொய் கூறியே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.
ராஜபக்ச அரசாங்கம் வழங்கிய எந்த நிவாரணங்களையும் மக்களுக்கு வழங்க முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment