முஸ்லிம் காங்­கி­ரஸ் இரண்டாக பிளவு! மறுக்கிறார் பஷீர் சேகுதாவூத்!!

zxcghfghஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் செய­லாளரும் இணைந்து புதிய அர­சியல் கட்­சி­யொன்­றினை  ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பர­வி­யுள்ள வதந்­தியில் எவ்­வித உண்­மை­யு­மில்லை.



நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை விட்­டுப்­பி­ரிந்து செல்லப் போவ­தில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.

கட்­சிக்குள் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்ள ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

இது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்­காக போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எம்.ரி. ஹசன் அலியும் பசீர் சேகு­தா­வூதும் இணைந்து புதிய அர­சியல் கட்­சி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சித்து வரு­கின்­றனர் என்று செய்­திகள் வெளி­வந்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
செய­லாளர் ஹசன் அலி தொடர்­பா­கவும் என்னைப் பற்­றியும் பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் இரண்டு அர­சியல் உச்­ச­பீட உறுப்­பி­னர்கள் தொடர்­பா­கவும் பலர் பல்­வேறு கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

கட்­சிக்குள் சமத்­துவம் இருக்க வேண்டும். அங்கு ஜன­நா­யக விழு­மி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும்.

மதிக்­கப்­பட வேண்டும். இந்தக் குறை­களை நாம் நிவர்த்தி செய்ய வேண்­டி­யுள்­ளது. இது எமது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும்

கட்சி தவ­று­த­லாக உயர்­பீட உறுப்­பி­னர்­களான இரண்டு மௌல­வி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்துள்ளது.

ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். எனவே கட்சிக்குள் ஜனநாயகம் சவாலாகியுள்ளமை தெளிவாகிறது என்றார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com