கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் ஓமன் நாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அங்கமாலியை சேர்ந்தவர் சிக்கு ராபர்ட்(28). இவரது கணவர் கேரள மாநிலம் சங்கனாசேரியை சேர்ந்த லின்சன். இருவரும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், காலை பணி ஒதுக்கப்பட்டதால் லின்சன் அதிகாலையிலேயே பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் தனது மனைவி பணிக்கு வராததால் லின்சன் அவருக்கு போன் செய்துள்ளார். போனை சிக்கு எடுக்காதததையடுத்து வீட்டுக்கு சென்ற லின்சன் மனைவின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு சிக்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது காதுகள் அறுக்கப்பட்டிருந்ததை பார்த்த லின்சன் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த அறையில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சிக்கு கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment