தமிழ், சிங்கள் புதுவருட விளையாட்டு போட்டிகளின் போது, வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசுகளாக மேடையில் வைத்து மதுபான போத்தல்கள் வழங்கிய சம்பவம் தலைமன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார், பியர் பகுதியில் கடந்த சனிக்கிழமை வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதன்போது மூவின மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய கழக உறுப்பினர்களுக்கு பரிசுகளாக மேடையில் வைத்து மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதுவருட கொண்டாட்டங்களில் மதுபான வகைகளை பரிசுகளாக வழங்கியமை சமூக சீர்கேடுகளிற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
இதேவேளை, இது போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment