சவூதி அரேபியா அரசாங்கம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் பின் அப்துல் மஜீட் அத்தூர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் சவூதி இளவரசரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பற்றி தெரிவித்துள்ளார்.
சவூதி இளவரசர் உலகமெங்கும் முதலீடுகளைச் செய்துள்ளாரெனவும் இலங்கையிலும் முதலீடுகளைச் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment