மருத்துவமனைக்கு உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவரை ஏற்று அவரது வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கச் செய்வதற்கு மருத்துவமனை மறுத்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வெளியில் பலரும் பார்த்துக் கொண்டிருக்க இறந்த பெண்ணின்வயிற்றை கத்தியால் வெட்டிக் கிழித்து இரு குழந்தைகளையும் வெளியில் எடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கமெரோனில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி காட்சியை அங்கிருந்தவர்கள் கையடக்கத் தொலைபேசி புகைப்படக் கருவிகள் மூலம் படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.
டோவலா நகரிலுள்ள லகுயடின்ரினி மருத்துவமனைக்கு வெளியில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மொனிக் கோமாரெக் (31 வயது) என்ற அந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண் கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையை வந்தடைந்த சமயம் அவர் உயிரிழந்ததால் அவரை மகப்பேற்று மருத்துவப் பிரிவுக்குள் அனுமதிக்க மருத்துவமனை உத்தியோகத்தர்கள் மறுத்துள்ளனர்.
இதன்போது மருத்துவத் தாதியொருவர் இறந்த அந்தப் பெண்ணின் வயிற்றிலுள்ள குழந்தைகள் உயிருடன் இருப்பதாக தெரிவித்ததால், அந்தக் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற பரிதவிப்பு அவரின் தாயாருக்கும் உறவினர்களுக்கும் ஏற்பட்டது.
குறிப்பிட்ட பெண்ணின் உறவினர் வெட்டுக் கத்திகளைப் பயன்படுத்தி இறந்த பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்தைகளை வெளியில் எடுத்துள்ளார்.
இதன் போது அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது. மற்றைய குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்தைகளை வெளியில் எடுத்து குறிப்பிட்ட உறவினரான பெண்ணைக் கைது செய்துள்ள பிராந்திய பொலிஸார், அந்த ம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் நீதிபதி அயாஹ் போல் அபின் தெரிவிக்கையில், அந்த மருத்து வமனை நிர்வாகத்தினர் தமது மருத்துவமனை எந்தவொரு தவறும் செய்யவில்லை எனத் தெரிவித்ததாகவும் ஆனால் அந்தப் பெண் உயிரிழந்துள்ளாரா என ஏன் மருத்துவமனைக்கு வெளியில் வைத்து பரி சோதிக்கப்பட்டது என்பது கேள்விக் கிட மாகவுள்ளது என கூறினார்.
மருத்துவமனை தவறு செய்திருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அந்த மருத்துவமனையின் பல உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment