முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் கஜதீபன்(26) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment