இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாண முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்தத் தீர்வை எட்டுவதற்கு அனைத்துத் தரப்பும் விசுவாசமாகச் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு சுமுகமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது என, யாழ்பாணத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாக விரும்புகின்றனர் என தான் கணிப்பதாகவும் சம்பந்தர் கூறியுள்ளார்.
இருபிராதன கட்சிகளின் தலைவர்களிடம் இதற்கான எண்ணப்பாடு இருக்கும் நிலையிலும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி ஆதரவும் கிடைக்கும் நிலையில், இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விரைவாக எட்டப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஊடகங்கள் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை குழப்பும் வகையில் செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ள அவர், சிலர் அந்த முன்னேற்றங்களை குழப்பும் நோக்கிலேயே கேள்விகளைக் கேட்கின்றனர் எனவும் சாடியுள்ளார்.
0 comments:
Post a Comment